10 வருட காதலருக்கு ப்ரியா பவானிசங்கரின் உருக்கமான வாழ்த்து!

  • IndiaGlitz, [Wednesday,January 27 2021]

நடிகை பிரியா பவானி சங்கர் பத்து வருடங்களாக ஒருவரை காதலித்து வரும் நிலையில் தனது காதலரின் பிறந்த நாளை அடுத்து உருக்கமான வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழ்த் திரையுலகில் ’கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான ப்ரியாபவானி சங்கர் அதன்பின் ’மான்ஸ்டார்’ ’மாபியா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பதும் தற்போது அவரது கைவசம் 4 படங்கள் இருப்பதால் அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த பத்து வருடமாக ராஜவேல் என்பவரை பிரியா பவானிசங்கர் காதலித்து வருகிறார். தனது காதலரின் புகைப்படத்தை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பிரியா பவானிசங்கர் இன்று தனது காதலரின் பிறந்தநாளை அடுத்து இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

அதில் இருவரும் இணைந்து பத்து வருடத்திற்கு முன்பு எடுத்த புகைப்பமும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் இணைந்துள்ளது. அந்த புகைப்படத்தில் உருக்கமான பிறந்த நாள் வாழ்த்தும் அவர் கூறியுள்ளார

என்னுடைய தந்தைக்கு நிகராக என்னை பார்த்துக் கொள்ளக் கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது நீங்கள் ஒருவர்தான். இந்த 10 ஆண்டுகளில் வாழ்க்கை முற்றிலும் மாறி விட்டது. ஆனால் நம் இருவருக்கும் உள்ள காதல் மட்டும் மாறவே இல்லை. உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று உருக்கமாக பதிவுசெய்துள்ளார்