அல்ரெடி லேட் ஆயிருச்சு, எல்லாரும் வெயிட் பண்ணிகிட்டு இருக்காங்க: ப்ரியா பவானிசங்கரின் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
அல்ரெடி லேட் ஆயிருச்சு என்றும், எல்லோரும் வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் பிரியா பவானி சங்கரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’திருச்சிற்றம்பலம்’. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது என்பதும் இதில் தனுஷ் மற்றும் அனிருத் ஒரே மேடையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் பாடல்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் ’திருச்சிற்றம்பலம்’ படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து வெளியான வீடியோவில் பிரியா பவானி சங்கர், ‘திருச்சிற்றம்பலம்’ ட்ரைலர் எப்ப வரும்? அல்ரெடி லேட் ஆயிருச்சு? எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க! என்று கூறும் காட்சி உள்ளது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில் தனுஷ், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
#Thiruchitrambalam Trailer - Delivering on 7th Aug @ 7pm ! @dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @silvastunt @omdop @editor_prasanna @jacki_art @theSreyas #ThiruchitrambalamTrailer pic.twitter.com/4tIaMNy3AK
— Sun Pictures (@sunpictures) August 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com