முக்கடல் சங்கமிக்கும் குமரியில் ப்ரியா பவானிசங்கர்: க்யூட் புகைப்படங்கள் வைரல்!

  • IndiaGlitz, [Saturday,October 30 2021]

சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ’பத்து தல’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக நாயகி பிரியா சங்கர் பவானி சங்கர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது என்பதும் கௌதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் மற்றும் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

’பத்து தல’ என்ற படத்தில் பிரியா பவானி சங்கர் தைரியமுள்ள தாசில்தார் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் கேரக்டருக்கு ஒரு அசல் தமிழ் பொண்ணு தேவை என்பதால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் நடந்த படப்பிடிப்பு குறித்து பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில் ’கடந்த சில நாட்களாக மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிகவும் ரம்மியமான இந்த பகுதியும், இந்த பகுதியில் உள்ள மக்கள், தட்பவெட்பம் மற்றும் உணவு ஆகியவை என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக உள்ளது என்று கூறியுள்ளார். இந்த பதிவும் அவர் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் எடுத்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு தற்போது மும்பையில் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவர் மும்பையில் இருந்து திரும்பி வந்ததும் ’பத்துதல’ படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.