மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாலி கட்டுவாராம்.. வடிவேல் காமெடியை நச் பதிலாக கொடுத்த நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் ’சொம்பில் தண்ணீர் வேண்டும் என்று கேட்பார், ஆனால் அவர் சொம்பு கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என்று கூறியதாக வதந்தி கிளம்பி சில நிமிடங்களில் அந்த திருமணமே நின்று விடும். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் அளித்த பேட்டி பல்வேறு வகைகளில் திரித்து ஊடகங்களில் செய்தியாக வெளியாகிய நிலையில் தற்போது அவர் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகை பிரியா பவானி சங்கர் பேட்டி அளித்தபோது திரைத்துறையில் நுழைய மிகவும் கஷ்டப்பட்டதாகவும் வாய்ப்புகள் பெறுவதற்காக கடினமாக உழைத்ததாகவும் ஒரு கட்டத்தில் பணம் கிடைக்கிறது என்பதற்காக ஒரு சில பாத்திரங்களை ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். ஆனால் அதன் பிறகு பணம் சம்பாதிப்பதை விட ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் அவர் பணம் சம்பாதிப்பதற்காகவே நடித்தேன் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் இந்த செய்திக்கு தனது பதிலடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் வடிவேலுவின் 'மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாலி கட்டுவாராம்’ என்று டேக் லைனை பதிவு செய்து, ‘ஆரம்பத்தில் இதற்கு நான் பதில் அளிக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் எந்த விதமான நம்பகத் தன்மையையும் இல்லாத செய்தி வெளியாவதால் விளக்கம் அளிக்கிறேன்.
முதலில் நான் பணத்திற்காக தான் சினிமாவுக்கு வந்தேன் என்று அந்த பேட்டியில் சொல்லவே இல்லை. ஒருவேளை அப்படி சொல்லி இருந்தாலும் தவறு இல்லை. பணத்திற்காகத்தான் நாம் எல்லோருமே வேலை பார்க்கிறோம். நடிகர் நடிகைகள் மட்டும் சம்பளம் வாங்கும் போது ஏன் இவ்வளவு மலிவாக பார்க்கப்படுகிறது என்று எனக்கு புரியவில்லை.
நீங்களே ஒன்றை முடிவு செய்து நீங்களே ஒரு செய்தியை ஏன் உருவாக்குகிறீர்கள்? நான் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்தில் இருக்கிறேன்’ என பதில் அளித்துள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
🙏🏼 https://t.co/1qM68L8xBc pic.twitter.com/3Xu6wNvnQd
— Priya BhavaniShankar (@priya_Bshankar) January 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments