மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாலி கட்டுவாராம்.. வடிவேல் காமெடியை நச் பதிலாக கொடுத்த நடிகை!

  • IndiaGlitz, [Thursday,January 19 2023]

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் ’சொம்பில் தண்ணீர் வேண்டும் என்று கேட்பார், ஆனால் அவர் சொம்பு கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என்று கூறியதாக வதந்தி கிளம்பி சில நிமிடங்களில் அந்த திருமணமே நின்று விடும். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் அளித்த பேட்டி பல்வேறு வகைகளில் திரித்து ஊடகங்களில் செய்தியாக வெளியாகிய நிலையில் தற்போது அவர் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகை பிரியா பவானி சங்கர் பேட்டி அளித்தபோது திரைத்துறையில் நுழைய மிகவும் கஷ்டப்பட்டதாகவும் வாய்ப்புகள் பெறுவதற்காக கடினமாக உழைத்ததாகவும் ஒரு கட்டத்தில் பணம் கிடைக்கிறது என்பதற்காக ஒரு சில பாத்திரங்களை ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். ஆனால் அதன் பிறகு பணம் சம்பாதிப்பதை விட ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால் அவர் பணம் சம்பாதிப்பதற்காகவே நடித்தேன் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் இந்த செய்திக்கு தனது பதிலடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் வடிவேலுவின் 'மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாலி கட்டுவாராம்’ என்று டேக் லைனை பதிவு செய்து, ‘ஆரம்பத்தில் இதற்கு நான் பதில் அளிக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் எந்த விதமான நம்பகத் தன்மையையும் இல்லாத செய்தி வெளியாவதால் விளக்கம் அளிக்கிறேன்.

முதலில் நான் பணத்திற்காக தான் சினிமாவுக்கு வந்தேன் என்று அந்த பேட்டியில் சொல்லவே இல்லை. ஒருவேளை அப்படி சொல்லி இருந்தாலும் தவறு இல்லை. பணத்திற்காகத்தான் நாம் எல்லோருமே வேலை பார்க்கிறோம். நடிகர் நடிகைகள் மட்டும் சம்பளம் வாங்கும் போது ஏன் இவ்வளவு மலிவாக பார்க்கப்படுகிறது என்று எனக்கு புரியவில்லை.

நீங்களே ஒன்றை முடிவு செய்து நீங்களே ஒரு செய்தியை ஏன் உருவாக்குகிறீர்கள்? நான் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்தில் இருக்கிறேன்’ என பதில் அளித்துள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
 

More News

நடிகை அபர்ணாவிடம் தவறாக நடக்க முயன்றாரா கல்லூரி மாணவர்? அதிர்ச்சி வீடியோ

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் கல்லூரி மாணவர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இது 'துணிவு' படத்துடன் ஒப்பிடும் பதிவல்ல', போட்றா பிஜிஎம் ஆ' : 'வாரிசு' பிரபலம் டுவிட்

இது 'துணிவு' படத்துடன் ஒப்பிடும் பதிவல்ல என்றும் அந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று 'வாரிசு' படத்தின் பிரபலம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

நிக்காம முன்னேறு.. கண்ணோரம் ஏன் கண்ணீரு... ஷிவினுக்கு பிக்பாஸ் நெகிழ்ச்சியான பாடல்!

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் ஐந்து போட்டியாளர்களையும் பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு போட்டியாளருக்கும் மலரும் நினைவுகளை பிக்பாஸ் ஏற்ப்படுத்தி தருகிறார்

இன்னும் பெரிய விஷயமெல்லாம் இருக்கு, அப்புறமா சொல்றேன்.. பணமூட்டையுடன் வெளியேறிய கதிரவனின் முதல் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை தாண்டி தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரும்.

டைட்டில் வெல்வார் என எதிர்பார்த்தோமே... பணப்பெட்டியுடன் கிளம்பியது இந்த போட்டியாளரா?

பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்த சீசனில் பணமூட்டை மற்றும் பணப்பெட்டி ஆகிய இரண்டும் அறிமுகம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டைட்டில் வெல்வார்