செய்திப் பிரிவில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள்....: ப்ரியா பவானிசங்கரின் 'சாத்தான்குளம்' பதிவு

  • IndiaGlitz, [Saturday,June 27 2020]

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் என்ற பகுதியில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட பத்து நிமிடங்கள் அதிக நேரம் கடை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் விசாரணையின் போது அவர்கள் இருவரும் மர்மமான முறையில் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காவல் நிலையத்தில் இருந்த இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் தான் இருவரையும் கொன்று விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பல கோலிவுட் திரையுலக பிரமுகர்கள் இது குறித்து தங்களது கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் நடிகை பிரியா பவானிசங்கர் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழ் செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த ப்ரியா பவானிசங்கர், ஊடகத்துறையின் செய்திப் பிரிவில் தான் வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் தன்னுடைய சீனியர் தனக்கு கூறிய அறிவுரைகளையும் அவர்கள் ஞாபகப்படுத்தினார். அவருடைய பதிவு இதுதான்:

செய்திப் பிரிவில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் எங்க chief சொன்னாரு, நம்மை சுற்றி அநீதி, பயங்கரங்கள் தினம் தினம் ஆயிரக்கணக்குல நடந்துகிட்டு தான் இருக்கு. ஆனால் வெகு சில சம்பவங்கள் தான் நம்ம பார்வைக்கு வரும். அப்படி வெளிச்சத்தை பார்க்கும் பயங்கர சம்பவங்கள், மாற்றத்தை ஏற்படுத்த, அதுபோல் இன்னொரு சம்பவம் நடக்காமல் தடுக்க ஒரு பாடமாக இருக்கனும். அது தான் நாம பாதிக்கப்பட்டவங்களுக்கு செய்யக்கூடியது. சாமானியர்களிடம் காட்டப்படும் அதிகாரத்தின் வீரியம், செல்வாக்கு நிறைந்த குற்றவாளிகளிடம் அடங்கிக்கிடகிறது. இது மரணம் இல்லை. கொலை. Suspension, transfer இதற்கான தண்டனை இல்லை. அரசாங்கமும் சட்டமும் எடுக்கப்போகும் நடவடிக்கை ஒரு குடும்பத்திற்கு மட்டும் இல்லை ஒட்டு மொத்த சாமானியர்களுக்குமான பதில் என்று பதிவு செய்துள்ளார். ப்ரியா பவானிசங்கரின் இந்த பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது

View this post on Instagram

செய்திப் பிரிவில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் எங்க chief சொன்னாரு, நம்மை சுற்றி அநீதி, பயங்கரங்கள் தினம் தினம் ஆயிரக்கணக்குல நடந்துகிட்டு தான் இருக்கு. ஆனால் வெகு சில சம்பவங்கள் தான் நம்ம பார்வைக்கு வரும். அப்படி வெளிச்சத்தை பார்க்கும் பயங்கர சம்பவங்கள், மாற்றத்தை ஏற்படுத்த, அதுபோல் இன்னொரு சம்பவம் நடக்காமல் தடுக்க ஒரு பாடமாக இருக்கனும். அது தான் நாம பாதிக்கப்பட்டவங்களுக்கு செய்யக்கூடியது. சாமானியர்களிடம் காட்டப்படும் அதிகாரத்தின் வீரியம், செல்வாக்கு நிறைந்த குற்றவாளிகளிடம் அடங்கிக்கிடகிறது. இது மரணம் இல்லை. கொலை. Suspension, transfer இதற்கான தண்டனை இல்லை. அரசாங்கமும் சட்டமும் எடுக்கப்போகும் நடவடிக்கை ஒரு குடும்பத்திற்கு மட்டும் இல்லை ஒட்டு மொத்த சாமானியர்களுக்குமான பதில். #justiceforjayarajandfenix Photo credits to the creator

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on Jun 26, 2020 at 11:10pm PDT