அழகு, ஆரோக்கியம் என்றால் என்ன? பிரியா பவானிசங்கரின் வித்தியசமான விளக்கம்!
- IndiaGlitz, [Wednesday,April 20 2022]
அழகு, ஆரோக்கியம் என்றால் நாம் நினைப்பது போல் பளிச்சென்று இருப்பதும் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வதும் கிடையாது என்றும் அதற்கு அர்த்தமே வேறு என்றும் நடிகை பிரியா பவானி சங்கர் பேட்டி ஒன்றில் வித்தியாசமான விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். எனது பயிற்சியாளரிடம் என்னை முழுக்க ஒப்படைத்து விடுவேன். அவர் 24 மணி நேரமும் யோசித்து என்னை எப்படி சரியானபடி ட்ரெய்னிங் செய்வது என்று ஆலோசிப்பார். நான் டயட்டில் அவ்வளவு சரியாக இருக்க மாட்டேன். டயட் என்பது நல்ல விஷயம் தான் என்றாலும் நாம் எதற்காக சம்பாதிக்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்? நாம் நன்றாக விரும்பியதை சாப்பிட்டுவிட்டு சந்தோசமாக இருப்போம் என்று நினைக்கும் ஆள் நான்.
என்னுடைய உடற்பயிற்சி நேரம் 30 நிமிடத்துக்குள் முடிந்துவிடும். பிட்னஸ் மற்றும் அழகு என்பது என்ன என்பதை நாம் அனைவரும் போட்டு குழப்பிக் கொள்கிறோம். ஸ்லிம்மாக இருப்பதும், பளிச்சென்று இருப்பதும் அழகு மற்றும் ஆரோக்கியம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் உண்மை கிடையாது.
நாம் ஆரோக்கியமாக இருப்பதற்காக தான் உடற்பயிற்சி செய்கிறோம். உடற்பயிற்சி செய்யும் போது தன்னம்பிக்கை கிடைக்கும், அதுவே உங்களை அழகாக காட்டும். சிகப்பாக இருப்பது, பருக்கள் இல்லாமல் இருப்பது, கண்ணில் கருவளையம் இல்லாமல் இருப்பதுதான் அழகு என்றால் நிச்சயமாக கிடையாது. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது தான் அழகு மற்றும் ஆரோக்கியம்’ என வித்தியாசமான விளக்கத்தை நடிகை பிரியா பவானி சங்கர் கொடுத்துள்ளார்.