பிறந்த நாளில் ப்ரியா பவானிசங்கருக்கு அடித்த ஜாக்பாட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் சிம்புவின் ’பத்துதல’ படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’ருத்ரன்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ’ருத்ரன்’ என்று சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் நாயகி பிரியா பவானிசங்கர் தான் என இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் அவரது பிறந்த நாளில் கிடைத்த ஜாக்பாட் ஆகவே கருதப்படுகிறது
இந்த படத்தின் படப்பிடிப்பு பொங்கல் முடிந்த உடன் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பு வெளிவரும் போது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது
பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த கதிரேசன் தயாரிக்கும் அடுத்த படமான ’ருத்ரன்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்தப்படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Happy to welcome on board @priya_Bshankar on our next venture#Rudharan #ருத்ரன் @offl_Lawrence @gvprakash @5starcreationss @teamaimpr@venkatjashu pic.twitter.com/GtCNFVZi58
— Fivestarcreations (@5star_creations) December 31, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments