பிறந்த நாளில் ப்ரியா பவானிசங்கருக்கு அடித்த ஜாக்பாட்!

  • IndiaGlitz, [Thursday,December 31 2020]

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் சிம்புவின் ’பத்துதல’ படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’ருத்ரன்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ’ருத்ரன்’ என்று சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் நாயகி பிரியா பவானிசங்கர் தான் என இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் அவரது பிறந்த நாளில் கிடைத்த ஜாக்பாட் ஆகவே கருதப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு பொங்கல் முடிந்த உடன் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பு வெளிவரும் போது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த கதிரேசன் தயாரிக்கும் அடுத்த படமான ’ருத்ரன்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்தப்படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

லீக் ஆன 'வலிமை' ஸ்டில்: அஜித்தின் அம்மா வேடத்தில் இவரா?

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில்

ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே: விஜய்சேதுபதியின் புதிய முயற்சி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி அவரது விஜய்சேதுபதி புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம்

வலிமை தயாரிப்பாளரின் அதிரடி டிவிட்… ஆனாலும் சோகம் தீராத தல ரசிகர்கள்!!!

தல அஜித் தனது ஹிட் படமான நேர்க்கொண்ட பார்வையைத் தொடர்ந்து தற்போது போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

ஆரியை ஐஸ் வைத்த கேபி அம்மா! எல்லாருக்கும் புரிஞ்சிருச்சு!

ஆரி மீது கை வைத்தால் அடுத்த வாரம் வெளியேற வேண்டியதுதான் என்பது தற்போது அனைவருக்கும் கிட்டத்தட்ட புரிந்துவிட்டது. இதனை ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அவர்களுடைய உறவினர்களும் அட்வைஸ் ஆக கூறி வருகின்றனர்

சிம்புவின் 'ஈஸ்வரன்' ரிலீஸ் தேதி: அட்டகாசமான போஸ்டருடன் அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படம் 'ஈஸ்வரன்', இந்தப்படம் தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மிக குறைந்த காலத்தில் படமாக்கப்பட்டது