அடப்பாவிங்களா.. 'இந்தியன் 2' மீம்ஸ்களுக்கு கதறல் பதில் அளித்த ப்ரியா பவானி சங்கர்..!

  • IndiaGlitz, [Saturday,July 13 2024]

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவரது கேரக்டர் குறித்து வெளிவந்திருக்கும் மீம்ஸ்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இந்த படத்தை கேலி கிண்டல் செய்து மீம்ஸ்களும் பதிவாகி வரும் நிலையில் பிரியா பவானி சங்கர் கேரக்டர் குறித்த மீம்ஸ் பதிவாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த மீம்ஸ்களுக்கு தனக்கு சமூக வலைதளத்தில் பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர் ’அட பாவிகளா, இது ஜஸ்ட் கதறல்ஸ் பாடலில் பிரியா பவானி சங்கர்’ என குறிப்பிட்டுள்ளார். தன்னை கேலி செய்யும் மீம்ஸ்களை கூட அவர் பெருந்தன்மையாக எடுத்து கருத்து தெரிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

பிரியா பவானி சங்கரின் இந்த பதிவுக்கு ‘அக்காவை கதற விட்டுட்டாங்க’ என்றும் ’அட்மின் ஜாக்கிரதையா இருந்துக்கோ, தாத்தா வரப்போறாரு’ என்றும் ’பேசாமல் நீ நியூஸ் சேனலுக்கே போயிடு சிவாஜி’ என்றும் காமெடி கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளது.

More News

லாஸ்லியா நாயகியாக நடிக்கும் படம்.. விஜய் பட தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..!

விஜய் உட்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் டான்ஸ் ஆடிய ரஜினிகாந்த்.. சினிமாவில் கூட இப்படி ஆடலையே..!

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணம் நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த திருமணத்திற்கு திரை உலக பிரபலங்கள்,

சபாஷ் சரியான போட்டி.. நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2', த்ரிஷாவின் 'மாசாணி அம்மன்'..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' என்ற திரைப்படம் 2020 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

தேவைப்பட்டால் எல்லாவற்றையும் சோஷியல் மீடியாவில் போடுவேன்: ரச்சிதாவை மிரட்டுகிறாரா தயாரிப்பாளர்?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தனது சமூக வலைதளத்தில் பிக்பாஸ் ரச்சிதாவை எல்லாவற்றையும் சோசியல் மீடியாவில் போட வேண்டிய நிலை ஏற்படும் என மிரட்டல் எடுக்கும் வகையில் செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சனி வக்ர பெயர்ச்சி 2024 பலன்கள்: உங்கள் ராசிக்கு என்ன பலன்கள்? | Dr. Arun Karthik Financial Astrologer

இந்த வீடியோவில், சிறந்த நிதி ஜோதிடர் Dr. Arun Karthik அவர்கள், 2024 ஆம் ஆண்டு சனி வக்ர பெயர்ச்சியின் பலன்களை பற்றி விரிவாக விளக்குகிறார்.