டக்குன்னு தமன்னா தான்னு நினைச்சிட்டேன்: ப்ரியா பவானிசங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ப்ரியா பவானி சங்கர் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் திடீரென சற்றுமுன்னர் தமன்னா ஸ்டைலில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் பல நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பார்த்த போது டக்குன்னு தமன்னாதான் என்று நினைத்து விட்டேன் என கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர் .
தமிழ் திரையுலகில் மிகவும் பிசியான நடிகைகளில் ஒருவரான ப்ரியா பவானி சங்கர் தற்போது தனுஷுடன் 'திருச்சிற்றம்பலம்’ சிம்புவுடன் ’பத்து தல’ அருண் விஜய் உடன் ’யானை’ ராகவா லாரன்ஸ் உடன் ‘ருத்ரன்’ உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ப்ரியா பவானி சங்கருக்கு சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்க்ள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமன்னா பாணியில் அட்டகாசமான கிளாமர் புகைப்படம் ஒன்றை கோல்ட் காஸ்ட்யூமில் ப்ரியா பவானிசங்கர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments