பிரியா பவானி சங்கருக்கு அன்பு முத்தம்.. காதலனுடன் இருக்கும் புகைப்படம் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் பிசியான நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புதிய புகைப்படத்தை பதிவு செய்து நாங்கள் புதிய வீட்டிற்கு குடியேற போகிறோம் என தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் ’மேயாத மான்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’கடைக்குட்டி சிங்கம்’ ’யானை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் அகிலன்’, ‘ருத்ரன்’ ’டிமான்டி காலனி 2’ ’இந்தியன்2’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் ராஜவேல் என்பவரை காதலித்து வருவதாகவும் அவருடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நாங்கள் புதிய வீட்டிற்கு அடியெடுத்து வைக்கப் போகிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ப்ரியா பவானி சங்கருக்கு அவரது காதலன் நெற்றியில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
18year old us fascinated having a place by the beach, spending our evenings looking at the moon raise by the sea! And here we are stepping in to our new home ♾️❤️ pic.twitter.com/fvh4yTqKJG
— Priya BhavaniShankar (@priya_Bshankar) December 3, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com