சிம்புவின் அடுத்த படத்தில் இணைந்த 'இந்தியன் 2' நாயகி!

  • IndiaGlitz, [Wednesday,December 30 2020]

சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் ’பத்து தல’ என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்றும், இந்தப் படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார் என்றும் வெளியான செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் சிம்புவுடன், கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ உள்பட ஒருசில படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பிரியாபவானிசங்கர் இணைய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாக இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் தாசில்தார் கேரக்டருக்கு ஒரு தமிழ் பெண்ணை தேடிக் கொண்டிருந்தேன் என்றும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள தாசில்தார் கேரக்டருக்கு பிரியா பவானி சங்கர் பொருந்துவார் என்று முடிவு செய்தேன் என்றும், அவருடைய முந்தைய படங்களை பார்த்தபோது அவருடைய இயற்கையான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது என்றும், எனவே அவரை இந்த கேரக்டருக்கு தேர்வு செய்தேன் என்றும் இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் தாசில்தார் கேரக்டர் மிகவும் போல்டான, தன்னிச்சையாக முடிவு எடுக்கும் ஒரு கேரக்டர் என்றும் இந்த கேரக்டர் பிரியாவுக்கு நல்ல புகழை பெற்று தரும் என்றும் அவர் மேலும் கூறினார். ’பத்து தல’ படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சிம்புவின் கேரக்டருக்கு ஜோடி இல்லை என்றாலும் தமிழ் ரீமேக்கில் அவருக்கு ஜோடி இருக்குமா? அப்படியே இருந்தால் அந்த கேரக்டரில் நடிப்பது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

வெளியே வரும் நிலைமையா? அதிர்ச்சியில் ரம்யா பாண்டியன்

இந்த வாரம் சிங்கிள் எவிக்சனோ அல்லது டபுள் எவிக்சனோ, நீ வெளியே வந்தால் அதற்கு காரணம் நீ கிடையாது என்று ரம்யாவின் சகோதரர் கூறியபோது 'வெளியே வரும் நிலைமை இருக்கின்றதா?

-45 டிகிரி செல்சிஸில் வாழும் மனிதர்கள்? சாட்சிக்கு வெளியாகி இருக்கும் வைரல் புகைப்படம்!!!

ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலப் பருவத்தின்போது ரஷ்யாவின் சைபீரியா தலைப்பு செய்திகளில் வந்து விடுகிறது.

உங்களால் தான் தகுதியில்லாதவர்கள் வீட்டில் இருக்கின்றார்கள்: ஆரி ரசிகர்களுக்கு அனிதா பதிலடி!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய ஆரிக்கு சமூக வலைத்தளத்தில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதும் ஆரியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்ட போட்டியாளர்களை

கலைப்புலி எஸ்.தாணுவுக்கு கிடைத்த பெருமைக்குரிய பதவி: குவியும் வாழ்த்துக்கள்!

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் திரையுலகில் நுழைந்து 50 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

தன்னலமின்றி 100% சரியான முடிவை எடுத்து உள்ளீர்கள்: ரஜினி குறித்து பிரபல இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சியை ஆரம்பிக்க போவதில்லை என்றும் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் எடுத்து இருக்கும்