அஜர்பைஜானில் பிரபல நடிகை.. அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் இணைகிறாரா?

  • IndiaGlitz, [Saturday,September 30 2023]

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக அஜித், மகிழ்திருமேனி உட்பட படக்குழுவினர் ஏற்கனவே அந்நாட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறப்பட்டது.

அக்டோபர் முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அதே அஜர்பைஜானுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் சென்றுள்ளார்.

அஜர்பைஜானில் தனது நண்பர்களுடன் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரியா பவானி சங்கர் பதிவு செய்திருக்கும் நிலையில் அவர் ‘விடாமுயற்சி’ படத்தில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் நாயகியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் இணைவாரா அல்லது தற்செயலாக அவர் அஜர்பைஜானுக்கு சுற்றுலா சென்றுள்ளாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் அஜித், த்ரிஷா, ஆரவ் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பின் உருவாக இருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடத்தப்படும் என்றும் அதன் பிறகு சென்னை திரும்பிய பின்னர் வட இந்தியாவில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது