காதலருடன் ப்ரியா பவானி சங்கர் சென்ற நகரம்.. இனி எனக்கு இரண்டாவது வீடு என அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகில் பிஸியான நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் தனது காதலருடன் வெளிநாட்டு நகரம் ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில் அந்நகரத்தை தனது இரண்டாவது வீடு என்று அறிவித்து நெகிழ்ச்சியுடன் செய்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி, அதன்பின் சீரியல்களில் நடித்த ப்ரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட அவர் விஷால் நடித்த ’ரத்னம்’ படத்தில் நடித்திருந்தார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை ப்ரியா பவானி சங்கர் காதலித்து வரும் நிலையில் தற்போது தனது காதலருடன் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகருக்கு சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் அவர் ’சிட்னி உண்மையில் எனது இரண்டாவது வீடு, பலமுறை இந்த நகருக்கு வருகை தந்துள்ளேன். இந்த இடம் மிகவும் அழகாக இருக்கும், இந்த ஊரின் மக்கள் மிகவும் அன்பானவர்கள் என்பதை கவனித்தேன்.
சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் என்னுடைய இதயம் நிறைந்த அன்பு மற்றும் நன்றியுடன் இந்த நகரத்துக்கு சென்றேன். எனக்கு விருப்பமான பல இடங்களை சுற்றி பார்த்தேன். ஒரு நீண்ட நடை பயணத்தை மேற்கொண்டது, காபி குடித்தது, இந்நாட்டு மக்களுடன் பேசியது, இரவில் ஒளிரும் நகரத்தை அமைதியாக உட்கார்ந்து ரசிப்பது என ஒரு உண்மையான வாழ்க்கையை வாழ்ந்தேன். இந்த தருணம் எங்களுக்கு பிரபஞ்சம் வழங்கிய அற்புதமான தருணம், அதற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சிட்னியில் தனது காதலருடன் எடுத்துக் கொண்ட விதவிதமான புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments