காதலர் இல்லாமல் சுவிஸில் காதலர் தின கொண்டாட்டம்.. ப்ரியா பவானி சங்கரின் க்யூட் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை பிரியா பவானி சங்கர் சுவிட்சர்லாந்தில் உள்ள நிலையில் அங்கிருந்து கொண்டே அவர் பதிவு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவர் தனியாக இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் காதலர் இல்லாமல் சுவிட்சர்லாந்தில் காதலர் தினம் கொண்டாடுகிறீர்களா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இந்த ஆண்டு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு பிரியா பவானி சங்கர் சுவிட்சர்லாந்தில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். பனிபடர்ந்த அழகிய பின்னணி உள்ள இந்த புகைப்படங்களை பார்க்கும் போதே மனதை கொள்ளை கொள்வதாக ரசிகர்கள் கமெண்ட்களில் பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் காதலர் இல்லாமல் சுவிஸில் காதலர் தினம் கொண்டாடுகிறீர்களா? என்ற கேள்வியையும் கேட்டு அவருக்கு காதலர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் பிரியா பவானி சங்கரின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டு ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை அள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ’ரத்னம்’, அருள்நிதியின் ’டிமான்டி காலனி 2’ ஆகிய மூன்று தமிழ் படங்களிலும் இரண்டு தெலுங்கு படத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments