நடிகை ப்ரியா பவானிசங்கர் வீட்டில் நிகழ்ந்த சோகம்: நெகிழ்ச்சியுடன் செய்த பதிவு!

  • IndiaGlitz, [Saturday,May 08 2021]

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ப்ரியா பவானி சங்கர் தற்போது ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’குருதி ஆட்டம்’ ’ஓ மணப்பெண்ணே’ ’பொம்மை’ ’ஹாஸ்டல்’ ’அருண் விஜய் -ஹரி திரைப்படம், ’ருத்ரன்’ ’இந்தியன் 2’ ’பத்து தல’ ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ப்ரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாத்தா காலமானது குறித்து நெகழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு இதோ:

ஒரு வெற்றிகரமான மனிதர். தனி மனுஷனா ஒன்னுமே இல்லாம வாழ்க்கைய ஆரம்பிச்சி 5 பசங்கள அமோகமா படிக்க வச்சி 10 பேரப் பசங்கள்ல 8 பேர டாக்டராக்கி அவங்களையும் டாக்டர்களுக்கு கட்டிக்கொடுத்து தான் உருவாக்கின ஒரு சிறிய மருத்துவர்கள் சூழ் உலகத்துல பெருமையா வாழ்ந்தவர்.

நான் தாத்தாவோட பிரியம் எல்லாம் இல்ல. சின்னதுலேர்ந்தே ‘என்னமா இவ்ளோ துஷ்டத்தனம் பண்ணுது இது’ 10வது வரை பள்ளி விடுமுறை விட்டா நாய் குட்டி மாதிரி எங்க 8 பேரையும் தாத்தா வீட்ல விட்ருவாங்க. கட்டில்கள், ஊஞ்சல்கள், கைகள், கால்கள், எங்க மண்டைகள்னு உடையாத ஐட்டம் எதுவும் இல்ல. கத்தி குத்து முயற்சி, ஆள் கடத்தல், கொலை முயற்சின்னு குற்றங்களும் இதில் அடக்கம். பட்டம், பம்பரம், கிட்டிப்புள், உண்டிகோல் தொடங்கி பரண்-ல தொங்கர வரைக்கும் அனைத்தும் கற்றது தாத்தா வீட்ல தான்.

ஆனா ராத்திரி தாத்தா வீட்டுக்கு வந்துட்டா கப்சிப் தான். உள்ள வரும் போதே அவரோட முதல் வேலை டிவியை இழுத்து மூடி பூட்டு போடறது தான். அப்போலாம் அந்த டோர் வச்ச டிவி. பெப்சி உங்கள் சாய்ஸ் மட்டும் பாத்துக்கறேன் தாத்தான்னு கெஞ்சினாக்கூட விட மாட்டார். இப்படியாக இளமை புதுமை, நீங்கள் கேட்ட பாடல், திரை விமர்சனம், நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்-னு நாங்க இழந்த ஷோக்கள் ஏராளம். எங்க பாட்டி தான் எங்களுக்கு ராக்ஸ்டார். தாத்தா பயப்படற, பேச்ச கேக்கற ஒரே ஆளு பாட்டி தான்.

இதெல்லாம் தினமும் நியாபகத்துல இருக்கற விஷயம் இல்ல. நேத்து இறந்து போய் அசையாம இருந்த தாத்தாவ பார்க்கும்போது மூளையின் ஓரத்துல எங்கயோ எப்பயோ புதஞ்சி மறந்துபோன ஓரு கோடி நியாபகம். டிவி சினிமாலாம் பார்க்கவே கூடாதுன்னு சொன்ன தாத்தாவோட, மெடிக்கல் காலேஜ் பக்கம் போகாத ஒரே பேத்தி நான். போன வாரம் கடைசியா அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, உன்னை உங்க அப்பா தைரியமான பொண்னா வளர்த்துருக்காரு. என் பொண்ணை நீ நல்லா பாத்துப்பன்னு தெரியும் சொன்னார். எங்க தாத்தா எங்களுக்கு எந்த சொத்தும் எழுதிட்டுப் போகல, ஆனா என்னோட முதல் சம்பளத்துல 1950ல அன்றைய காசு 24 ரூபாக்கு என் அம்மாக்கு வாங்கின தோடு் இது, இனி நீ வச்சுக்கோன்னு கொடுத்தார். இது நாம் நினைத்துப் பார்க்க முடியாத எதையும் விட விலைமதிப்பற்றது என்றும், ஒருமுறை நான் அந்த முதியவரால் மதிக்கப்படுவதையும் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் உணர்ந்தேன். உங்க அம்மாவோட தோடையும் உங்க பொண்ணையும் மாப்ளையும் என் உயிர விட பத்திரமா பாத்துப்பேன் தாத்தா. சந்தோஷமா போய்ட்டு வாங்க

ப்ரியா பவானிசங்கரின் இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

அவர் ஒரு இரும்பு மனிதர், அசைக்கவே முடியாது: ரம்யா பாண்டியனின் இன்ஸ்டா பதிவு

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் செய்திகள் வெளியானது

உங்கள் தொகுதியில் முதலமைச்சராக ஷில்பா பிரபாகர் நியமனம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னதாக சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது அனைத்து மாவட்டங்களிலும் குறைத்தீர்ப்பு கூட்டத்தை நடத்தி அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மனுக்களை பெற்று இருந்தார்.

கார்த்தி நழுவ விட்ட வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட விஷால்!

நடிகர் கார்த்தி நடிக்க வேண்டிய திரைப்படம் ஒன்றில் தற்போது விஷால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

தமிழகத்தில் ஊரடங்கு குறித்து நடிகர் சித்தார்த் கருத்து!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மே 10ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களை அடுத்து திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயணமா? முதல்வர் டுவிட்

தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற முக ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார்