எனக்கே உங்களை பிடிக்கும்ன்னா பாத்துக்கோங்களேன்: ப்ரியா பவானிசங்கர் குறிப்பிட்டது யாரை?
Send us your feedback to audioarticles@vaarta.com
சின்னத்திரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த பிரியா பவானிசங்கர் ’மேயாதமான்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின்னர் கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் தற்போது அவர் ’ஓ மணப் பெண்ணே’ ’இந்தியன்-2’ உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பவர்களில் ஒருவர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பிரியா பவானிசங்கர் தன்னுடைய ஜிம் பயிற்சியாளர் ஜீவா என்பவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் பிறந்த நாள் கேக்கை இருவரும் முகத்தில் பூசிக்கொண்டிருக்கும் காட்சி உள்ளது.
அதில் ’ஜீவா உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமையும். பொதுவாக என்னை வேலை செய்ய வைக்கும் நபர்களை எனக்கு பிடிக்காது. ஆனால் எனக்கே உங்களைப் பிடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்’ என்று கூறியுள்ளார். நீங்கள் என்னை ஃபிட்டாக மாற்றினீர்கள். என்னுடைய கலோரிகளும் எடையும் குறைந்தது உங்களால்தான்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com