நடிகை ப்ரியா பவானிசங்கருக்கு காதல் தோல்வியா?

  • IndiaGlitz, [Sunday,May 17 2020]

சமீபத்தில் வெளியான ‘மாஃபியா’ உள்பட தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ள ப்ரியா பவானிசங்கர், சமீபத்தில் தனது கல்லூரி காலத்து நண்பர் ராஜவேல் என்பவரை காதலிப்பதாக செய்திகள் வெளியானது. ப்ரியாவும், ராஜவேலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராமில் தெரிவித்ததால் இந்த காதல் உறுதி என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ப்ரியா பவானிசங்கர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் வரும் ஒருசில வார்த்தைகள் அவருக்கு பிரேக் அப் ஆகிவிட்டது போன்ற அர்த்தத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அந்த பதிவு இதுதான்.

சித்ரா பௌர்ணமி இரவு!

போன வருஷம் இதே நாள், ‘கிரிவலம் போனா, மூணு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்’னு நண்பர் சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதலை சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன். கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார். ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாகப் பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது.

ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமல்ல உலகமே மாறிடுச்சு.நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளைப் பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரமாக அடுத்த வாழ்க்கைக்குத் தயாராக இந்தத் தனிமை தூண்டவில்லை. தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்? கேட்டதைத் தராமல் நல்லதைத் தந்த கடவுள் மேலயும் சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்தப் பிடிப்புமின்றி நான். கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி.

மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும்

வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு

இவ்வாறு ப்ரியா பவானி சங்கர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த பதிவு ப்ரியாவின் காதல் குறித்து இல்லை என்றும், ப்ரியாவும் ராஜவேலும் குடும்ப அளவில் நண்பர்கள் என்பதால் இருவருக்கும் இடையே பிரச்சனை வர வாய்ப்பு இல்லை என்றும், இந்த பதிவை வைத்து அவருடைய காதல் முடிவுக்கு வந்துவிட்டது போன்ற ஒரு கருத்தை புரிந்து கொள்ள வேண்டாம் என்று அவருடைய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

View this post on Instagram

சித்ரா பௌர்ணமி இரவு! போன வருஷம் இதே நாள், ‘கிரிவலம் போனா, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்’னு friend சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன். கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார்?? ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாக பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது. ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்ல உலகமே மாறிடுச்சு.நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை. தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்? கேட்டதை தராமல் நல்லதை தந்த கடவுள் மேலயும் சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்த பிடிப்புமின்றி நான். கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி. மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும் வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு❤️

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on May 7, 2020 at 11:26am PDT

More News

லாக்டவுனால் மீளமுடியாத கடன்: தூக்கில் தொங்கி நடிகர் தற்கொலை

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்

ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது! ஓவ்வோரு தடவையும் ஜெயிக்கணும்: சிவகார்த்திகேயனுக்கு டுவீட் போட்ட கலெக்டர்

தமிழகத்தில் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

மணிரத்னம் படம் மிஸ் ஆனது எப்படி? மனம் திறந்த 'மாஸ்டர்' நடிகர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஏற்கனவே கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலக பிரபலங்கள் அனைவரும் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

ஓடிடியில் வெளியாகும் ஐந்து மொழி திரைப்படம்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது

திரையரங்குகளில் மதுபானங்கள்: பிரபல இயக்குனரின் ஐடியா

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிந்தாலும், மேலும் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக