காதலருக்கு பிறந்தநாள்.. கட்டிப்பிடித்து உருகி உருகி வாழ்த்து சொன்ன பிரியா பவானி சங்கர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை பிரியா பவானி சங்கர் கடந்த பல ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்து வரும் நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் அவரை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிஸியான நடிகைகளின் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவர் தற்போது விஷால் நடிப்பில் ஹரி இயக்கி வரும் ’ரத்னம்’, கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து ஒரு சில மாதங்களில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜவேல் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக பிரியா பவானி சங்கர் காதலித்து வரும் நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காதலர் ராஜவேலுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் ப்ரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராமில் உருகி உருகி செய்துள்ள ரொமான்ஸ் பதிவு வைரலாகி வருகிறது.
அந்த பதிவில் ’நீதான் எனக்கு சிறந்தவனாக இருக்கிறாய். என்னுடைய மிகச்சிறந்த நண்பன் நீ தான்,. நாம் சேர்ந்து இருக்கிறோம், சண்டை போட்டு இருக்கிறோம். அழுது இருக்கிறோம் அதே வேளையில் உயர்ந்து கொண்டே இருக்கிறோம். நாம் இருவரும் ஏ முதல் இசட் வரை வித்தியாசமானவர்கள். ஆனால் என்னை முழுமையாக நிறைவு செய்பவன் நீதான்.
நீ என்னுள் இருக்கும்போது நான் அமைதியாக உணர்கிறேன், வேடிக்கையாக உணர்கிறேன், உன்னுடன் அமர்ந்து மிகவும் அழகான சூரிய அஸ்தமத்தை என்னால் ரசிக்க முடிகிறது. எனக்கு நீ மட்டும் போதும். நான் ஆனந்தமாக இந்த உலகை கோடி கனவுகளுடன் வாழ்வேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் அவர் காதலரை கட்டிப் பிடித்தவாறு ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments