முட்டாள்தனமான வாதம்: நெட்டிசனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ப்ரியா பவானிசங்கர்!
- IndiaGlitz, [Tuesday,May 04 2021]
தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகை ப்ரியா பவானிசங்கர் டுவீட்டுக்கு முட்டாள்தனமான வாதம் என நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில் அந்த கருத்துக்கு ப்ரியா பவானிசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ப்ரியா பவானிசங்கர் நீண்ட காலத்திற்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழி நடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பலமடங்கு நம்பிக்கையுடன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம், வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்தார்.
ப்ரியா பவானிசங்கரின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர் முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது. அப்படியே உங்கள் முட்டாள்தனமான வாதப்படி கூட 2011க்கு பிறகு 2021ல் தான் தேர்தல் வரும். அது என்ன நீண்ட காலம்? 2016ல் ஜெயலலிதா தான் முதல்வர் வேட்பாளர், அப்புறம் முதல்வர் இறந்ததால் ஆட்சி கவிழும் என்று சட்டமும் கிடையாது’ என்று கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த ப்ரியா பவானசங்கர் ’Take a Seat' என்றால் seatஐ தூக்கிக்கிட்டு நில்லு என்று அர்த்தமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்ன்னா மக்கள் உட்கார்ந்து இங்கி பிங்கி போட்டு தேர்ந்தெடுத்தார்கள் என்று அர்த்தம் கிடையாது. ஆறாம் வகுப்பை விட நிறைய படித்து இருக்கின்றேன். மற்றபடி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை’ என்று கூறியுள்ளார். ப்ரியா பவானிசங்கரின் இந்த பதிலடி தற்போது வைரலாகி வருகிறது.
நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் @mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம்.வாழ்த்துகள்??????
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 3, 2021
take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது.6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir.மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை https://t.co/qHjzK4tQTu
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 4, 2021