காதலியின் கருவை கலைத்து, திருமண செய்துகொள்வதாக அழைத்து சென்று... விஷம் கொடுத்து கொள்ள துணிந்த காதலன்!
- IndiaGlitz, [Wednesday,May 08 2019]
சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில், சேலத்தைச் சேர்ந்த லோகநாதன்( 26) என்பவரும், சென்னையைச் சேர்ந்த பிரியா (23) என்பவரும், ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் நெருங்கி பழகியதால் பிரியா கர்ப்பமாகியுள்ளார். தற்போது குழந்தை வேண்டாம் என லோகநாதன், பிரியாவை சமாதானம் செய்து, கருவை கலைக்க செய்துள்ளார்.
பின் பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனை நச்சரித்துள்ளார். இதனால் சொந்த ஊரில் வைத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி, பிரியாவை சேலம் மாவட்டம், ஓமலூருக்கு கடந்த 1 ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளார்.
பேருந்து நிலையத்தில் பிரியாவை அமர வைத்துவிட்டு, தன்னுடைய பெற்றோர்... இருவரும் சேர்ந்து சென்றாள் பிரச்சனை செய்வார்கள். அதனால் நான் முதலில் சென்று பெற்றோரை சமாதானம் செய்துவிட்டு பின் உன்னை வந்து அழைத்துச் செல்கிறேன் என அன்பு வார்த்தைகளைக் கூறி சென்றுள்ளார்.
ஆனால் லோகநாதன் சென்று பல மணி நேரமாகியும் வரவில்லை இதனால் காதலி பிரியா, காதலனின் வீட்டிற்க்கே தேடிச் சென்றுள்ளார்.
லோகநாதனின் பெற்றோர் மற்றும் உறவினர், பிரியா வேறு ஜாதியைச் சேர்ந்த பெண் என்பதால், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காதலனுடன் சேர்ந்து வைத்துவிடுமாறு, கெஞ்சிக் கூத்தாடிய பிரியாவை சரமாரியாக தாக்கி வெளியேற்றியுள்ளனர்.
படுகாயமடைந்த அவர் மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்த சம்பவம் குறித்து மேச்சேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்க்கு இடையே, பிரியாவிற்கு உதவி செய்வதாக கூறி பிரபல அரசியல் கட்சியினரும் உதவி செய்வது போல் வந்து, தற்போது பணம் வாங்கி தந்து விடுவதாகவும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என பிரியாவை மிரட்டியுள்ளனர்.
உதவி செய்ய யாரும் இல்லாமல் அல்லாடி வந்த பிரியா, பயத்தில் ஓமலூரில் இருந்து மேட்டூருக்கு வந்ததாக தெரிகிறது. அங்கு வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்த அவரை, லோகநாதன் மற்றும் குடும்பத்தினர் சிலர் வலுக்கட்டாயமாக அவருடைய வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி தற்போது பிரியா ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பிரியா. இந்த சம்பவம் குறித்து ஓமலூர் காவல் துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.