ப்ரியா அட்லி தொடங்கியுள்ள புதிய தொழில் இதுதான்.. நெகிழ்ச்சியான பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன் ப்ரியா அட்லி ஒரு புதிய தொழிலை தொடங்க இருப்பதாகவும் அது குறித்த இணையதளத்தையும் வெளியிடப் போவதாகவும் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தனது தொழில் குறித்த முழு விவரங்களை நெகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.
பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி ப்ரியா அட்லி, ‘ரெட் நாட்’ என்ற பெயரில் புதிய ஆடை தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்திற்கான இணையதளத்தை அறிமுகம் செய்துள்ள ப்ரியா அடலி இது குறித்து தனது பக்கத்தில் கூறியதாவது:
’இந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது, என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான இந்த ரெட் நாட் பிராண்ட் என்னுடைய நீண்ட நாள் கனவாகும். உங்கள் அனைவரின் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ப்ரியா அட்லியின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தொடங்கி உள்ள குவித்து வருகின்றனர்.
ஏற்கனவே நடிகை நயன்தாரா, 9 ஸ்கிரீன் என்ற நிறுவனத்தை தொடங்கி அதில் பெண்களுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ரெட் நாட் என்ற பெயரில் ப்ரியா அட்லியும் ஆடை நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
Heyyyy everyone!!! It’s hard to put into words just how much this moment means to me..#RedKnot has been a dream that’s been close to my heart for so long.. The wait is over.. Hope y'all love it as much as we do ❤️
— Priya Mohan (@priyaatlee) August 30, 2024
From our hearts to yours 🔗 https://t.co/IyUVWSoYN4
Follow… pic.twitter.com/rk3pS8jdJu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments