ப்ரியா அட்லி தொடங்கியுள்ள புதிய தொழில் இதுதான்.. நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Saturday,August 31 2024]

கடந்த சில நாட்களுக்கு முன் ப்ரியா அட்லி ஒரு புதிய தொழிலை தொடங்க இருப்பதாகவும் அது குறித்த இணையதளத்தையும் வெளியிடப் போவதாகவும் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தனது தொழில் குறித்த முழு விவரங்களை நெகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி ப்ரியா அட்லி, ‘ரெட் நாட்’ என்ற பெயரில் புதிய ஆடை தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்திற்கான இணையதளத்தை அறிமுகம் செய்துள்ள ப்ரியா அடலி இது குறித்து தனது பக்கத்தில் கூறியதாவது:

’இந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது, என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான இந்த ரெட் நாட் பிராண்ட் என்னுடைய நீண்ட நாள் கனவாகும். உங்கள் அனைவரின் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ப்ரியா அட்லியின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தொடங்கி உள்ள குவித்து வருகின்றனர்.

ஏற்கனவே நடிகை நயன்தாரா, 9 ஸ்கிரீன் என்ற நிறுவனத்தை தொடங்கி அதில் பெண்களுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ரெட் நாட் என்ற பெயரில் ப்ரியா அட்லியும் ஆடை நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

More News

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்.. டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோ..!

தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி தற்போது சில படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோ

குறி வச்சா இரை விழனும்: 'வேட்டையன்' ரஜினியின் டப்பிங் வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக

தற்காப்பு கலை பயிற்சியில் ஸ்ருதிஹாசன்.. 'கூலி' படத்திற்காக எடுத்த புதிய முயற்சி..!

உடற்தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்..

எதிர்பார்ப்புகளைத் தாண்டி எகிற வைக்கும் GOAT...

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பளார் T. சிவா. அம்மா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் பல வெற்றித் திரைப்படங்களை வெளியிட்டவர். நடிகராவும், விநியோகஸ்தராகவும் இருப்பவர்.

சத்யராஜை அடிக்க ஏணி கேட்ட சுருளிராஜன்...

மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனின் மனைவி தனது கணவரின் திரையுலக பயண வாழ்க்கை குறித்தும்,