அட்லிக்கு கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சா? செம ரொமான்ஸ் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குநர் அட்லியின் திருமண நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அட்லியின் மனைவி கிருஷ்ண பிரியா பதிவு செய்துள்ள செம ரொமான்ஸ் புகைப்படம் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரை உலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக பணிபுரிந்த அட்லி, கடந்த 2013ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் தளபதி விஜய் நடித்த ‘தெறி’, ’மெர்சல்’ ’பிகில்’ ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கிய அட்லி தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் அடுத்தாண்டு ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது முதல் படம் ரிலீஸ் ஆன பின்னர் அட்லி தனது நீண்ட நாள் காதலியான கிருஷ்ணபிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இன்றுடன் அட்லி - கிருஷ்ணபிரியா திருமணம் நடந்து எட்டு ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து ப்ரியா அட்லி ரொமான்ஸ் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ’எட்டு வருடங்கள் ஆகிவிட்டது.. என்றென்றும் இதேபோல் செல்லவேண்டும். எனது அன்பான கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள். நீங்கள் தான் என் பலவீனம், அதேபோல் நீங்கள் தான் என் பலம், என் எல்லாமே நீங்கள் தான். என்றென்றும் நான் உங்களை காதலிக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com