ப்ரியா அட்லி பதிவு செய்த படுக்கையறை புகைப்படம்: கமெண்ட்ஸை ஆஃப் செய்தது ஏனோ?

இயக்குனர் அட்லி மனைவி ப்ரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கையறை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் கமெண்ட்ஸ் பதிவு செய்ய முடியாத வகையில் ஆப் செய்து வைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி என்பதும் தற்போது அவர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அட்லியின் மனைவி பிரியா அட்லி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவ்வப்போது அட்லியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படுக்கை அறையில் தனது காலடியில் அட்லி படுத்து தூங்கும் புகைப்படத்தை ப்ரியா அட்லி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த புகைப்படத்திற்கு தனது பாலோயர்கள் கமெண்ட்ஸ் செய்ய முடியாத வகையில் கமெண்ட்ஸ் பகுதியை ஆஃப் செய்து வைத்தது ஏன் என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.