அட்லி பட ஹீரோயினை விட கிளாமரா இருக்காங்களே.. ப்ரியா அட்லி போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!
- IndiaGlitz, [Sunday,March 10 2024]
இயக்குனர் அட்லி படத்தின் ஹீரோயின்கள் அனைவரும் கிளாமராகவும் அழகாகவும் காண்பிக்கப்படுவார்கள் என்ற நிலையில் அவரது மனைவி ப்ரியா அட்லி சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படங்களுக்கு அட்லி பட ஹீரோயினை விட கிளாமராக இருக்கிறார் என்று கமெண்ட் குவிந்து வருகிறது.
பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி ப்ரியா அட்லி என்பதும் இருவரும் அவ்வப்போது தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்யும் ரொமான்ஸ் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் சற்றுமுன் ப்ரியா அட்லி கிளாமரான காஸ்ட்யூம் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்றும் கமெண்ட்ஸ் பதிவு செய்துள்ள நிலையில் அட்லி பட ஹீரோயினை விட அழகாக இருக்கிறீர்கள், இதையே மெயின்டன் பண்ணுங்கள் என்று பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.