close
Choose your channels

'ஜவான்' படத்தின் செம்ம அப்டேட் கொடுத்த ப்ரியா அட்லி.. வீடியோ வைரல்..!

Sunday, August 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி உள்ள ’ஜவான்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிரட்டியது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியான நிலையில் தற்போது அடுத்த சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பதும் பிரியா அட்லியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இந்த பாடலின் புரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அனிருத் கம்போஸ் செய்த ’காதலா காதலாகும்’ என்ற இந்த மேஜிக்கல் மெலடி பாடல் அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்திருக்கும் இந்த மெலடி ரொமான்ஸ் பாடல் நிச்சயம் அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகிபாபு, அம்ரிதா ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் மற்றும் சஞ்சய்தத் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment