உன்னுடைய பாய்ஸ்களிடம் இருந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. மனைவிக்காக அட்லியின் ரொமான்ஸ் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அட்லி மற்றும் அவருடைய மகன் இருவரும் பிறந்தநாள் வாழ்த்து கூறியதை குறிப்பிடும் வகையில், "உன்னுடைய பாய்ஸ்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பிரியா தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
பிரபல இயக்குனர் அட்லி தொலைக்காட்சி நடிகை பிரியாவை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பிரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குனர் அட்லி இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரொமான்ஸ் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், "எனது அருமை பாப்பா ப்ரியா அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ எனது மகள், அன்பு, எல்லாமே. நீ இல்லாவிட்டால், அது முழுமை பெறாது. எனது பலம் நீதான், எனது வெற்றி, கவுரவம், அன்பு எல்லாமே நீதான். உன்னுடைய பாய்ஸ்களிடமிருந்து உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். நீ தான் எங்களது உலகம். உன்னை பெருமிதம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்," என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை பிரியா அட்லி திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் நடிக்காமல் இருந்தாலும், ஹிந்தியில் உருவான ’தெறி’ படத்தின் ரீமேக் ’பேபி ஜான்’ என்ற திரைப்படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அட்லியின் அடுத்த படத்தில் சல்மான் கான் நடிக்க இருப்பதாகவும், அதில் கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்த் இன்னொரு ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout