அட்லியை டுவிட்டரில் திட்டிய ப்ரியா அட்லி!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த பிகில் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இறுதி காப்பி இன்று காலை தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே இதுவரை இரவு பகல் தூங்காமல் பிஸியாக இருந்த இயக்குநர் அட்லி தற்போது முழுவதுமாக அனைத்து பணிகளில் இருந்தும் விடுதலை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அவர் தற்போது டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். பிகில் படத்தில் கிடைத்த சுகமான அனுபவம், விஜய்யுடன் ஏற்பட்ட நட்பு, நயன்தாராவுடன் பணிபுரிந்த நேரம் மற்றும் ஏஆர் ரகுமானின் இசையில் மயங்கியது உட்பட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் அட்லியிடம் அவரது மனைவி ப்ரியாவும் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். பிகில் படம் முடிந்தவுடன் என்கூட நேரத்தை கழிக்காமல் அங்கே என்ன இன்டர்வியூ? சீக்கிரம் வீட்டுக்கு வாங்க? என்று பிரியா அட்லி கேட்க, அதற்கு அட்லி ’இதோ வந்து கொண்டே இருக்கிறேன் 5 நிமிடத்தில் வந்து கொண்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். டுவிட்டரில் அட்லியும் அவரது மனைவியும் செய்த ரொமான்ஸை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
Coming papa coming in 5 mins!! Dho dho dho!! https://t.co/hyDR2nBq7G
— atlee (@Atlee_dir) October 24, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com