அட்லியை டுவிட்டரில் திட்டிய ப்ரியா அட்லி!

  • IndiaGlitz, [Thursday,October 24 2019]

விஜய் நடித்த பிகில் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இறுதி காப்பி இன்று காலை தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே இதுவரை இரவு பகல் தூங்காமல் பிஸியாக இருந்த இயக்குநர் அட்லி தற்போது முழுவதுமாக அனைத்து பணிகளில் இருந்தும் விடுதலை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் தற்போது டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். பிகில் படத்தில் கிடைத்த சுகமான அனுபவம், விஜய்யுடன் ஏற்பட்ட நட்பு, நயன்தாராவுடன் பணிபுரிந்த நேரம் மற்றும் ஏஆர் ரகுமானின் இசையில் மயங்கியது உட்பட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் அட்லியிடம் அவரது மனைவி ப்ரியாவும் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். பிகில் படம் முடிந்தவுடன் என்கூட நேரத்தை கழிக்காமல் அங்கே என்ன இன்டர்வியூ? சீக்கிரம் வீட்டுக்கு வாங்க? என்று பிரியா அட்லி கேட்க, அதற்கு அட்லி ’இதோ வந்து கொண்டே இருக்கிறேன் 5 நிமிடத்தில் வந்து கொண்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். டுவிட்டரில் அட்லியும் அவரது மனைவியும் செய்த ரொமான்ஸை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

More News

அஜித் குறித்து அட்லி பதிவு செய்த டுவீட்

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ளது

நயன்தாரா என் டார்லிங், தேவதை: ரசிகரின் கேள்விக்கு அட்லி பதில்

விஜய் நடித்த பிகில் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று அந்த படத்தின் இயக்குனர் அட்லி, டுவிட்டர் இணையதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்

அதுக்குள்ள எப்படி? அட்லியின் ஆச்சரியத்திற்கு காரணம் என்ன?

விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று இரவு வெளிநாட்டிலும் நாளை காலை இந்தியாவிலும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இருப்பினும் இந்த படத்திற்கு இன்னும் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை

திருப்பதி கோவிலில் நயன்தாரா! பிகில் வெற்றிக்காக வேண்டுதலா?

தளபதி விஜய் உடன் நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் நாளை உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளதை அடுத்து இன்று நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் திருப்பதி கோவிலுக்கு

பிரபல நடிகையின் கணவர் தூக்கில் தொங்கி மரணம்: கொலையா? தற்கொலையா?

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாக இருந்து வரும் நடிகை ராகவியின் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.