திடீரென சூழ்ந்த வெள்ளம்: ஜோதிகா பட நாயகனின் அம்மா சிக்கியதால் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,May 23 2020]

திடீரென சூழ்ந்துகொண்ட வெள்ளத்தில் பிரபல ஹீரோவின் அம்மா சிக்கிக் கொண்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழில் ஜோதிகா நடித்த ‘மொழி’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் நடிகர் பிரத்விராஜ். இவர் ’கனாக்கண்டேன்’ ’பாரிஜாதம்’ ‘சத்தம் போடாதே’ ’வெள்ளித்திரை’ ’நினைத்தாலே இனிக்கும்’ ’காவிய தலைவன்’ உள்பட தமிழ் படங்களிலும் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்தவர். இவருடைய அம்மா மல்லிகா சுகுமாரன் என்பவரும் ஒரு நடிகை தான். இவர் தமிழில் சீமான் இயக்கிய ’வாழ்த்துக்கள்’ என்ற படத்தில் நடித்துள்ளார்

இந்த நிலையில் நடிகை மல்லிகா சுகுமாரன் தனது வீட்டில் இருந்தபோது அந்த பகுதியில் பயங்கர மழை பெய்துள்ளது. இதனை அடுத்து அவருடைய வீட்டின் அருகில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அவருடைய வீடு தண்ணீரால் சூழப்பட்டது

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நடிகை மல்லிகா சுகுமாரனை வெள்ளத்தில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மல்லிகா சுகுமாரன் கூறிய போது ’எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் அணையின் ஷட்டரை திறந்து விட்டதால் தான் வெள்ளம் சூழ்ந்து விட்டதாகவும், தனது வீட்டுக்கு அருகில் உள்ள கால்வாயில் சரிசெய்யாமல் இருந்தது தான் இந்த வெள்ளத்துக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்

ஏற்கனவே கடந்த ஆண்டு இவரது வீட்டை சுற்றி வெள்ளம் சூழ்ந்தது என்பதும் அப்போதும் தீயணைப்புத் துறையினர் அவரைக் காப்பாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

More News

லாக்டவுன் நேரத்தில் அமலாபால் பொழிந்த தத்துவம்: இணையத்தில் வைரல்

இந்த லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்பில் இல்லாமல் வீட்டில் இருக்கும் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்களையும் புகைப்படங்களையும்

'நிசப்தம்' தியேட்டரிலா? ஓடிடியிலா? தயாரிப்பாளர் விளக்கம்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை சற்றுமுன்  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள நிலையில்

நம்பிக்கை அளிக்கும் விதத்தில் மடகாஸ்கர் அறிமுகப்படுத்திய கோவிட் மூலிகை மருந்து!!! WHO என்ன சொல்கிறது???

கொரோனா சிகிச்சைக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் மடகாஸ்கர் நாட்டின் அதிபர் ஆண்டரி ராஜோலினா செய்தி வெளியிட்டு இருந்தார்.

WHO - தென் அமெரிக்கா கொரோனாவின் புதிய மையமாகிறது!!! கொரோனாவில் இரண்டாம் இடத்தை பிடித்த ரஷ்யா!!!

கொரோனா பாதிப்பினால் பிரேசில் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் நேற்று கொரோனா பரவல் வரிசையிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.