தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு

கடந்த சில வாரங்களாகவே சென்னையில் கொரொனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருவதும் தினமும் அதிக நபர்கள் பலியாகி வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு விஐபிக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரொனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி அவர்களும் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டுமின்றி திமுக பிரமுகரான விபி கலைராஜன் என்பவருக்கும் கொரொனா பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் என்பவர் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தாமோதரன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனாவுக்கு முதல்வர் அலுவலக செயலாளரே உயிரிழந்த இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சேலத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டவிழாவின்போது புகைப்படங்கள் எடுத்த புகைப்பட கலைஞர் ஒருவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

கொரோனா சிகிச்சைக்கு குறைந்த விலையில் மருந்து: கேம் சேஞ்சராக இருக்குமா என எதிர்பார்ப்பு!!!

கொரோனா சிகிச்சைக்கு ஒரு புதிய கேம் சேஞ்சராக இருக்கும் என ஸ்டிராய்டு வகை மருந்து ஒன்றை பிரிட்டன் அதிபர் பரிந்துரை செய்திருக்கிறார்.

சீன ராணுவத்தினரின் பலி எண்ணிக்கை எவ்வளவு? அமெரிக்க உளவுத்துறையின் தகவலால் பெரும் பரபரப்பு 

இந்தியா சீன ராணுவ வீரர்கள் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற இடத்தில் நடந்த மோதல் உலக நாடுகளையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீனாவை அடுத்து பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியாவை சுற்றி வளைக்கும் அண்டை நாடுகள்

நேற்று முன்தினம் நள்ளிரவு லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 வீரர்கள் பலியாகி

அணுஆயுதம் அதிகமாக வைத்திருக்கும் நாடு: சீனாவா??? இந்தியாவா???

உலக நாடுகளிடையே அணு ஆயுதச் சோதனைகள் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையாகப் பார்க்கப்பட்டாலும் ஒவ்வொரு நாடும் தங்களது ஆயுதப் படைகளை வலுப்படுத்திக் கொண்டே வருகின்றன

என்னால ஏசி இல்லாம இருக்க முடியாது: கொரோன டெஸ்ட் எடுக்க டிக்டாக் பிரபலத்தால் பரபரப்பு

நான் சிங்கப்பூரில் ஏசியில் இருந்து பழகி விட்டதால் என்னால் சாதாரண அறையில் டெஸ்ட் எடுக்க வர முடியாது என்றும், சிறப்பு அறை வேண்டும், தனிமைப்படுத்தப்பட்டால்,