கனமழை எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வருவாய் நிர்வாக ஆணையர் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Friday,November 03 2017]

இலங்கை அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த ஐந்து நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை, சட்டப்பல்கலை தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊழியர்களின் நலன் கருதி இன்று ஒருநாள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவருடைய வேண்டுகோளின்படி பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் இன்று விடுமுறையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மழையால் பாதித்த மக்களுக்கு ஜி.வி.பிரகாஷின் மகத்தான உதவி

சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டை ஞாபகப்படுத்தும் வகையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பல மணி நேரம் கனமழை பெய்து வருவதால்

மாணவர்களின் கோரிக்கை ஏற்பு: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. அதுமட்டுமின்றி சாலைவழி போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

நான் இந்திய பிரஜை: எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்க எனக்கு உரிமை உண்டு: அமலாபால் அறிக்கை

கடந்த சில தினங்களாக நடிகை அமலாபால் புதுவையில் உள்ள முகவரியில் சொகுசுக்கார் வாங்கியதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், அமலாபால் கார் வாங்கியதில் எந்தவித முறைகேடும் இல்லை

ஆரம்பமாகிறது த்ரிஷாவின் 'பரமபத விளையாட்டு

தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு-தண்ணீர்: விஷால் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து கடந்த ஐந்து நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.