கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள்… எச்சரிக்கும் தமிழக அரசு!
- IndiaGlitz, [Monday,June 07 2021]
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்த புகார்களை பதிவு செய்வதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அந்தப் புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொரோனா சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தனியார் மருத்துவமனைகளுக்கும் உரிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே நிர்ணயித்த தொகையைத் தொகையை தவிர்த்து யாரும் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மேலும் தற்போது அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனவும் வலியுறுத்தி உள்ளது.