லூசிபர் இயக்குநரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு… இந்தப் படத்திலும் மோகன்லால் இருப்பாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
“லூசிபர்” வெற்றிக்குப் பிறகு நடிகர் பிருத்விராஜ் தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்திலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் பிருத்விராஜ் திரைப்பட இயக்கத்திலும் அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் அரசியலைக் கதைக்களமாகக் கொண்ட “லூசிபர்” திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் மலையாள சினிமாவில் அதிக வசூல் சாதனையைப் பெற்றிருந்தது. இதனால் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்திற்கு பதிலாக மீண்டும் நடிப்பிலேயே கவனம் செலுத்தினார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு பிருத்விராஜ் நடிப்பில் “அய்யப்பனும் ஜோஷியும்” திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இந்த மாத இறுதியில் “கோல்ட் கேஸ்” திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் திரைப்பட இயக்கத்தை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“BRO DADDY“ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க உள்ளார். அதோடு நகைச்சுவை கலந்த குடும்பப் பாங்கான கதை இது என்பதையும் பிருத்விராஜ் தெரிவித்து உள்ளார்.
My 2nd directorial. #BRODADDY will once again be headlined by The Lalettan @Mohanlal , with an ensemble cast including yours truly. Produced by #AntonyPerumbavoor (#AashirvadCinemas), a fun family drama that makes you smile, laugh & want to revisit. Rolling soon. Very soon. ?? pic.twitter.com/uNW75kUciP
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) June 18, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com