மோசமான விபத்தில் சிக்கிய நடிகர் பிருத்விராஜ்… மருத்துவமனையில் இருந்து வெளியான தகவல்!

  • IndiaGlitz, [Monday,June 26 2023]

தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்துவரும் நடிகர் பிருத்விராஜ் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது விபத்து ஏற்பட்டதாகவும் அதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களிடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் முக்கிய நடிகராக இருந்துவரும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் பல்வேறு வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். மேலும் லூசிஃபர், ப்ரோ டாடி என இரண்டு ஹிட் படங்களை இயக்கி இயக்குநர் அவதாரத்தையும் தக்க வைத்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் வில்லன், முக்கிய கதாபாத்திரம், ஹீரோ என்று தொடர்ந்து நடிப்பில் பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகிவரும் ‘விளையத் புத்தர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொச்சி அடுத்த மறையூர் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது ஒரு முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப் பட்டதாகவும் அப்போது மோசமான விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படகிறது. இந்த விபத்தில் நடிகர் பிருத்விராஜின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது.

இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் காலில் ‘கீ ஹோல்’ அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்த நிலையில் விரைவில் அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மலையாள நடிகரான பிருத்விராஜ் தமிழில் ‘கனா கண்டேன்’ திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ‘பாரிஜாதம்’, ‘சத்தம் போடாதே’, மொழி‘, ‘காவியத் தலைவன்’, ‘ராவணன்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘விளையத் புத்தர்’, ‘ஆடுஜீவிதம்’ போன்ற திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் இந்தியில் அக்ஷய் குமாருடன் இணைந்து ‘படே மியான் சோட் மியான்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நடிகர் பிருத்விராஜ் இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் நடிகர் பிருத்விராஜ் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

More News

நடிகர் பால சரவணன் மகள் மளமளவென வளர்ந்துவிட்டாரே.. க்யூட் வீடியோ வைரல்..!

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர் பாலசரவணனின் மகள் பிறந்தநாள் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாலசரவணன் மகள் மளமளவென வளர்ந்து

ஒரு படம் கூட சேர்ந்து நடிக்கல..  உமாபதி - ஐஸ்வர்யா காதல் எப்படி ஆரம்பித்தது?

 பொதுவாக திரையுலக நட்சத்திரங்கள் சேர்ந்து நடிக்கும் போது காதல் உருவாகும் என்றும் அந்த காதல் திருமணம் வரை செல்லும் என்பதையும் பார்த்து இருக்கிறோம்.

இந்த புன்னகைக்கு விலை மதிப்பே இல்லை.. சித்தி இதானியின் க்யூட் வீடியோ..!

 நடிகர் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை சித்தி இதானி, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பள்ளிக்கு சென்று பரிசுகள் கொடுத்த

தாமதமாகும் கமல்ஹாசன் படம்.. எச். வினோத் எடுத்த அதிரடி முடிவு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் தாமதமாகும் என்று தெரிய

நெதர்லாந்தில் உணவகம் திறந்த சிஎஸ்கே வீரர்… விராட் கோலியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

இந்தியக் கிரிக்கெட் அணியில் விளையாடி வந்த முன்னாள் வீரர் ஒருவர் நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் பிரம்மாண்ட உணவகம் ஒன்றை திறக்கவுள்ளதாகத் தகவல்