மோசமான விபத்தில் சிக்கிய நடிகர் பிருத்விராஜ்… மருத்துவமனையில் இருந்து வெளியான தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்துவரும் நடிகர் பிருத்விராஜ் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது விபத்து ஏற்பட்டதாகவும் அதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களிடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் முக்கிய நடிகராக இருந்துவரும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் பல்வேறு வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். மேலும் லூசிஃபர், ப்ரோ டாடி என இரண்டு ஹிட் படங்களை இயக்கி இயக்குநர் அவதாரத்தையும் தக்க வைத்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் வில்லன், முக்கிய கதாபாத்திரம், ஹீரோ என்று தொடர்ந்து நடிப்பில் பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகிவரும் ‘விளையத் புத்தர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொச்சி அடுத்த மறையூர் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது ஒரு முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப் பட்டதாகவும் அப்போது மோசமான விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படகிறது. இந்த விபத்தில் நடிகர் பிருத்விராஜின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் காலில் ‘கீ ஹோல்’ அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்த நிலையில் விரைவில் அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மலையாள நடிகரான பிருத்விராஜ் தமிழில் ‘கனா கண்டேன்’ திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ‘பாரிஜாதம்’, ‘சத்தம் போடாதே’, மொழி‘, ‘காவியத் தலைவன்’, ‘ராவணன்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘விளையத் புத்தர்’, ‘ஆடுஜீவிதம்’ போன்ற திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் இந்தியில் அக்ஷய் குமாருடன் இணைந்து ‘படே மியான் சோட் மியான்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நடிகர் பிருத்விராஜ் இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் நடிகர் பிருத்விராஜ் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments