18 ஆண்டுகளாக ருசிக்காத வெற்றி.. நெகிழ்ச்சியுடன் திருக்குறளை பதிவு செய்த பாண்டியராஜன் மகன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் இயக்குனர் பாண்டியராஜன் மகன் பிருத்விராஜன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வெற்றியை ருசித்திருப்பதாகவும், இதனால் தனது தந்தை மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் திருக்குறளை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
நடிகர் பாண்டியராஜன் மகன் பிருத்விராஜன் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ’கைவந்த கலை’ ’நாளைய பொழுது உன்னோடு’ ’வாய்மை’ ’முப்பரிமாணம்’ உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து வந்தாலும் இதுவரை ஒரு மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ரிலீஸான ’ப்ளூ ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் பிருத்விராஜன் , சாம் என்ற கேரக்டரில் நடித்து இருந்தார். இவர் இந்த படத்தில் காமெடியாக கவிதை சொல்லும் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனை அடுத்து பிரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
என்ற திருக்குறளை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அதேபோல் ஒரே ஒரு வெற்றிக்காக பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருப்பவர் பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்யராஜ். இவரும் தனது சமூக வலைத்தளத்தில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’எனது அப்பா, எனது முதல் ஹீரோ, ’ப்ளூ ஸ்டார்’ படத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து எனது அப்பா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த இரண்டு பதிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
My dad .. My first hero ❤️
— Shanthnu (@imKBRshanthnu) January 31, 2024
Makkale… Thank you for making my father smile from the bottom of his heart 😊 Your reception and support for #bluestar has made that possible 💙💫 Always grateful 🙏🏻#bluestarrunningsuccessfully @AshokSelvan @prithviactor @officialneelam… pic.twitter.com/zTJTOYtWvY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com