பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்கும் சூப்பர்ஹிட் பட இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டு 'சர்தார்’, ‘காரி’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ’கொலைகாரன்’ ’வதந்தி’ போன்ற படங்களை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இன்னொரு படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த ’எஃப் ஐஆர்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
We are happy to announce that we have signed @itsmanuanand (FIR Fame) for his next film. @lakku76 @venkatavmedia @johnmediamanagr
— Prince Pictures (@Prince_Pictures) January 13, 2023
Exciting updates are on the way! pic.twitter.com/70j0KvIsRH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com