இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் மனித இனத்தையே அழிக்க மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் போராடி வருகின்றனர். அனைத்து நாடுகளின் அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளை கொரோனா வைரஸுக்கு எதிராக எடுத்து தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற போராடி வருகின்றன
இருப்பினும் கொரோனா வைரஸ், ஏழை எளியோர் மற்றும் கோடீஸ்வரர் என்ற பேதமின்றி, ஜாதி மத இன பேதமின்றி, சாதாரண குடிமகன் முதல் முக்கிய விவிஐபிக்கள் வரை அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த செய்தி இங்கிலாந்து மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் தற்போது நாட்டின் இளவரசக்கே கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
BREAKING NEWS: Prince Charles tests positive for Coronavirus. pic.twitter.com/PXS8Kt5gYF
— Piers Morgan (@piersmorgan) March 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com