புருனே நாட்டு இளம் வயது இளவரசர் திடீர் மரணம்!!! உலகத் தலைவர்கள் இரங்கல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
புருனே நாட்டு சுல்தான் ஹசனல் போங்கியாவின் மகனும் அந்நாட்டு இளவரசருமான ஹாஜி அப்துல் அசம் (38) கடந்த சனிக்கிழமை காலை திடீரென உயிரிழந்து உள்ளார். இந்த தகவலை அந்நாட்டு அரசும் உறுதி செய்து இருக்கிறது. இந்நிலையில் உலக நாடுகளில் உள்ள பல தலைவர்களும் சுல்தான் ஹசனல் அவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
உயிரிழந்த இளவரசர் சிங்கப்பூர் நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தன்னுடைய படிப்பை நிறைவு செய்திருக்கிறார். இந்தத் தகவலை குறிப்பிட்டு காட்டி சிங்கப்பூரின் அதிபர், பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எனப் பலரும் இரங்கலைத் தெரிவித்து உள்ளனர். மேலும் அவருடைய கருணை உள்ளம் கொண்ட குணம் மற்றும் செயல்பாடுகளைக் குறித்தும் சிறப்பித்து கூறியுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள வல்லமை படைத்த அரசக் குடும்பத்தில் 4 ஆவது இடத்தில் இளவரசர் அசம் இருக்கிறார். மேலும் இளவரசர் அசம் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு இருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஹிலாரி ஸ்வாங்க் நடித்த "You are not You" என்ற பிரபலமான திரைப்படத்தை இவர் தயாரித்து இருந்தார்.
தன்னுடைய அப்பா புருனே மக்கள் மீது செலுத்தி வரும் அதிகாரத்தின் குறித்து இளவரசர் எதிர்மறையான கருத்துகளைக் கொண்டிருந்தார். இதை சர்வதேச அளவில் விமர்சித்தும் கருத்துகளை கூறியிருக்கிறார். சினிமா துறையை தன்னுடைய பகுதிநேர வேலையாக மட்டுமே இவர் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் சனிக்கிழமை காலை திடீரென அவருடைய உயிர் பிரிந்து இருக்கிறது. இறுதி சடங்கும் அன்று மாலை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இளவரசர் இறப்புக்கான காரணத்தை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com