தமிழில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் இன்று தமிழ்ப்புத்தாண்டு தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் அனைவருக்கும் குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாரத பிரதம நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளத்தில் தமிழில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ' 'என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமருக்கு பலர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்படும் இதே நாள் கேரளாவில் விஷு பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கிறிஸ்துவ மக்கள் இன்று 'புனித வெள்ளி' தினத்தை கொண்டாடி வருகின்றனர். அதுகுறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், 'ஏசு கிறிஸ்துவின் சேவை மற்றும் தியாகத்தை நாம் நினைவு கொள்ள வேண்டும்' என பதிவு செய்துள்ளார்.
என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்
— Narendra Modi (@narendramodi) April 14, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout