அதிபர் ட்ரம்பை கட்டித் தழுவி வரேவேற்றார் பிரதமர் நரேந்திர  மோடி

  • IndiaGlitz, [Monday,February 24 2020]

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்த விமானம் குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தின் படிக்கட்டுகளில் இருந்து ட்ரம்ப்பும் அவரது மனைவியும் ஒருசேர இறங்கி வந்தனர். படிக்கட்டுகளை விட்டு இறங்கியவுடன் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ட்ரம்பை கட்டித் தழுவிக்கொண்டார். இருவரின் தழுவல்களும் நட்புரீதியாக பலம் வாய்ந்ததாக இருந்தது. பக்கத்தில் இருந்த மொலானியாவிற்கு மோடி கைக்குலுக்கி தனது வரவேற்பை தெரிவித்துக் கொண்டார்.

வரேவேற்பு முடிந்ததும் தற்போது குஜராத் மாநில நாட்டுப் புறக் கலைஞர்கள் தங்களது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். மொடேரா மைதான திறப்பு விழாவிற்கு பிறகு, மதியம் சபர்மதி ஆசிரமத்திற்கு இரு தலைவர்களும் செல்ல உள்ளனர்.

மாலையில் உலகின் புகழ் பெற்ற காதல் சின்னமான தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க உள்ளனர். நாளை காலை குடியரசு தலைவர் மாளிகையில் இருநாட்டு தலைவர்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடைபெற இருக்கிறது.

இப்பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு போன்றவை குறித்து விவாதிக்கப் படும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மதியம் குடியரசு தலைவர் மாளிகையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு விருந்து அளிக்கப் பட உள்ளது. மாலை அதிபர் ட்ரம்ப் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மாலை அமெரிக்க திரும்ப உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.