பள்ளிகளுக்கு வரலாம்: தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிசாமி அவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாட இருப்பதை அடுத்து பள்ளிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் குறித்து கொண்டாடுவது குறித்து தொடக்க கல்வித்துறை இயக்குனர் சில அறிவுறுத்தல்களை சுற்றறிக்கையில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்கள், மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், அனைத்து வகை பள்ளிகளிலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும்.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். தேசியக் கொடியை ஏற்றி எளிமையான முறையில் கொண்டாட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளா்களாக செயல்படும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களின் சேவையைப் பாராட்டி, அவா்களை விழாவுக்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும்.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களையும் விழாவுக்கு அழைக்கலாம். விழாவில் பங்கேற்பவா்கள், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் கொண்டு தயார் செய்த தேசியக் கொடிகளை காட்சிப்படுத்தவும், பயன்படுத்தவும் கூடாது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments