ஒரு ஜீன்ஸ் விலை சுமார் ஒரு கோடி ரூபாயா? அப்படி என்ன இருக்கு அதில்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனத்தில் நடந்த ஏலம் ஒன்றில் ஒரு ஜீன்ஸ் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஏலம் போனதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கடந்த 1857ஆம் ஆண்டு வட கரோலினா கடலில் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் அந்தக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அதில் பழமையான ஜீன்ஸ் ஒன்று 114,000 அமெரிக்க டாலருக்கு ஏலம் போனதாக தகவல்கள் வெளியானது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 94 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் சுமார் ஒரு மில்லியன் டாலர் அளவுக்கு ஏலம் போனதாகவும் அதில் அனைவரையும் கவர்ந்தது இந்த ஜீன்ஸ் என்றும் கூறப்படுகிறது.
1873 ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட லெவி ஸ்ட்ராஸ் & கோ என்ற நிறுவனத்தால் இந்த ஜீன்ஸ் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனம் அதிகாரபூர்வமாக ஜீன்ஸ் தயாரிப்பில் ஈடுபடுவதற்கு 16 ஆண்டுகளுக்கு முன் கப்பல் மூழ்கியிருந்தாலும், இந்நிறுவனத்திற்கும் இந்த ஜீன்ஸ்க்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நவீன ஜீன்ஸின் தந்தை என்று கூறப்படும் லெவி ஸ்ட்ராஸ் & கோ நிறுவனம் அதிகாரபூர்வமாக ஜீன்ஸ் தயாரிப்பில் இறங்குவதற்கு முன்பே இந்த ஜீன்சை தயாரித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இது ஒரு யூகம் தான் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
எப்படி இருந்தாலும் ஒரு பழமையான ஜீன்ஸ் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போன தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments