அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பின் அரசு கறுப்பினத்தவர்கள் மீது வெறுப்பை காட்டுகிறதா??? தொடரும் பரபரப்பு நிகழ்வுகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கடந்த சில தினங்களாகவே கறுப்பினத்தவர்கள் கடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காரணம் அமெரிக்க காவல் துறையினர் ஒரு கறுப்பினத்தவரை தாக்குவது போன்ற ஒரு வீடியோ கடந்த இரு தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகி அது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த வீடியோவில் காட்டப்பட்ட ஜார்ஜ் பிராய்ட் என்ற 46 வயதான நபர் இறந்து விட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
சமூக வலைத் தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோவில் ஜார்ஜ் பிராய்ட் என்ற நபர் ஒரு காரின் சக்கரத்திற்கு அடியில் தனது தலையை வைத்துக் கொண்டு “என்னை விட்டு விடுங்கள், வலிக்கிறது” எனக் கெஞ்சுவது போல காட்சி வெளியாகி இருக்கிறது. அவரின் கெஞ்சலைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் ஒரு காவல் அதிகாரி அவரின் கழுத்து மீது தனது பூட்சுகாலை வைத்து அழுத்துகிறார். இப்படித்தான் அந்த வீடியோ காட்சி பதிவாகி இருக்கிறது. ஒரு உணவகத்தில் கள்ளப் பணத்தை ஜார்ஜ் பிராய்ட் செலுத்தியதாக அவரின் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்ததாகவும் அந்தக் குற்றத்திற்காக ஜார்ஜை காவல் துறையினர் கைது செய்தனர் என்றும் தகவல் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் ஜார்ஜின் மரணத்திற்கு காரணமான காவல் துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை விலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் மினியா பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஆரம்பத்தில் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வெள்ளை மாளிகையை நோக்கியும் சென்றிருக்கிறது. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் இப்படி தாக்குதலுக்கு ஆளாவது இது முதல் முறை அல்லவென்றும் இதற்கு முறையான விசாரணை வேண்டும் என்றும் போராட்டக் காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மினியா பகுதியை அடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டக் காரர்கள் தற்போது போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றனர். நியூயார்க், லாஜ் ஏன்ஜெல்ஜ், சிகாகோ, டென்வர், பீனிஸ் போன்ற பகுதிகளிலும் போராட்டங்கள் தற்போது வலுத்து வருகிறது. ஜார்ஜ் பிராய்டின் மரணத்திற்கு காரணமான 4 காவல் துறையினர் தற்போது பதவியை விட்டு நீக்கப்ட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து டிவிட்டரில் கருத்து வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “மினியா போன்ற அமெரிக்காவின் சிறந்த இடங்களில் இப்படி நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தீவிர இடதுசாரி கொள்கையுள்ள மேயர் ஃபிரே இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட வேண்டும்” எனவும் ட்ரம்ப் பதிவு செய்திருக்கிறார். ஆளுநருடன் இந்த விவாரகம் குறித்து தான் கலந்து ஆலோசித்து இருப்பதாகவும் ஆளுநருக்கு இராணுவம் துணைநிற்கும் எனவும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், “மினியா பகுதியில் ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் அதைக் கட்டுப்படுத்துவோம், ஆனால் வங்கிக் கொள்ளை நடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்” எனவும் ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டு இருக்கிறார்.
தற்போது அமெரிக்க அதிபரின் இந்த டிவிட்டர் பதிவு, வன்முறையைத் தூண்டு விதமாக இருக்கிறது என பதிவின் கீழ் டேக் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் டிவிட்டர் நிறுவனம் பதிவை இன்னும் நீக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக அதிபர் ட்ரம்ப் பதிவிட்ட சில டிவிட்டர் பதிவுகளை அந்நிறுவனம் வன்முறையைத் தூண்டும் விதமாக இருக்கிறது எனக் காரணம் காட்டி அதை முற்றிலும் அழித்து இருக்கிறது. இதனால் கோபமடைந்த அதிபர் ட்ரம்ப் சமூக வலைத்தளங்களின் கழுத்தை நெறிக்கும் விதமாக சில சட்டங்களை கொண்டு வருவதற்கான விதிமுறைகளில் கையெழுத்திடவும் செய்திருக்கிறார். தற்போது கறுப்பினத்தவர்களின் போராட்டங்கள் குறித்து அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தி இருக்கிறார். அந்த வார்த்தைத்தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments