ஒபாமாவின் திட்டத்துக்கு முடிவுக்கட்டும் அதிபர் ட்ரம்ப்!!! பரபரப்பு நிகழ்வுகள்!!!

  • IndiaGlitz, [Friday,June 19 2020]


 

உலகமே கொரோனா பீதியில் இருந்தாலும் அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றிய கணிப்புகளையும் மக்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். காரணம் வலுத்தது எது ஜனநாயகக் கட்சியா? குடியரசு கட்சியா? என்ற போட்டி அனைத்து விஷயங்களிலும் தொடருகிறது. தற்போது குடியரசு கட்சியின் அதிபர் ட்ரம்ப், ஒபாமா தனது ஆட்சியில் நடைமுறைப் படுத்திய குடியேற்றக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பரபரப்பாக செயலாற்றி வருகிறார்.

அமெரிக்காவில் எந்த ஆவணங்களும் இன்றி குடியேறிய 65 ஆயிரம் இளைஞர்களை நாடு கடத்துவதற்கு எதிராக டாகா திட்டத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்படுத்தி இருந்தார் முன்னாள் அதிபர் ஒபாமா. அவர்களை நாடு கடத்துவதில் இருந்து காப்பாற்றி பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற அனைத்து விஷயங்களையும் அந்நாட்டு அரசு ஏற்படுத்தி தரும் வகையில் டாகா திட்டம் உருவாக்கப் பட்டு இருக்கிறது. தற்போது அதிபர் ட்ரம்ப் டாகா சட்டத் திட்டத்தை முடிவுக்கொண்டு வந்துவிடலாம் என்று அதிரடி காட்டி வருகிறார். டாகா திட்டத்தை ரத்து செய்ய இயலாது என அந்நாட்டு கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆனால் அதிபர் ட்ரம்ப் அதோடு விடவில்லை. உச்ச நீதிமன்றத்தையும் நாடியிருக்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டாகா திட்டத்தை ஏன் ரத்த செய்ய வேண்டும் என்ற காரணத்தை வெள்ளை மாளிகை தெளிவாகக் கூறவில்லை. இது சட்டத்திற்கு உட்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கியது. இந்தச் சட்டத்தில் யாரும் தன்னிச்சையாக செயல்பட முடியாது என அதிபர் ட்ரம்ப்பின் செயல்பாடுகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதுகுறித்த அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டத்துடன் கருத்து தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.