ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எடுத்துக்கொண்ட பிறகு அதிபர் ட்ரம்ப் முற்றிலும் நலமாக இருக்கிறார்!!! வெள்ளைமாளிகை அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பாதுகாப்பானது அல்ல என்று உலகச் சுகாதார நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்த அறிக்கை வெளியான பின்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இந்த மருந்துக்கு தடை விதித்தது. அதேபோல பிரான்ஸ் அரசாங்கமும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டாம் எனத் தடைவித்து உள்ளது. கொரோனா சிகிச்சையின் போது இந்த மருந்து குறைந்த இரத்த அழுத்தம், இதயப்பாதிப்பு, சில நேரங்களில் மரணத்தை ஏற்படுத்தும் அபாயம் கூட இருக்கிறது என கடந்த வாரத்தில் Tha Lancet ஆய்விதழில் விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.
நிலைமை இப்படியிருக்க மே மாதத்தின் தொடக்கத்தில் கொரோனா நோய் பரவலில் இருந்து தப்பித்துக் கொள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த மருந்தைத் தடுப்பு மருந்தாக எடுத்துக் கொள்வதாகவும் செய்தி வெளியிட்டு இருந்தார். இரண்டு வாரங்களுக்கு பின்பு அதை நிறுத்தி விட்டதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் அதிபர் இந்த மருந்தை, தடுப்பு மருந்தாக எடுத்துக் கொண்டபின்பு நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். ஒருவேளை மீண்டும் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டால் இந்த மருந்தை மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு எடுத்துக் கொள்வார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். கொரோனா சிகிச்சைக்கு இந்த மருந்து ஏற்றதல்ல என அந்நாட்டு நோய்த்தொற்று விஞ்ஞானிகள் அதிபருக்கு ஆலோசனைகளை வழங்கியபோது அதைப் பொருட்படுத்தாமல் ஒரு கேம் சேன்ஜராக இருக்கும் எனவும் அதிபர் பரிந்துரை செய்தார். அதனால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியும் செய்யப்பட்டது.
கடந்த மார்ச் 24 ஆம் தேதி அமெரிக்காவின் FDA கொரோனா சிகிச்சைக்கு இந்த மருந்தை அங்கீகரிக்கவும் செய்தது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்பது கடந்த 1946 ஆம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. மலேரியா, முடக்குவாதம் குழந்தைகளுக்கு ஏற்படும் கால் வலி, லூபஸ், ஆட்டோ இம்யூன் போன்ற நிலைகளில் இது மிகுந்த பயன்பாட்டைத் தருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com