உலகச் சுகாதார அமைப்புடன் மோதல் காட்டிவரும் அதிபர் ட்ரம்ப்!!! அடுத்து என்ன???

  • IndiaGlitz, [Wednesday,April 15 2020]

 

கொரோனா பரவல் பற்றிய தகவல்களை சீன அரசு மறைத்துவிட்டதாக ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டிவருகிறார். இதனால் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான மோதல் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் சீனாவின் இத்தகைய நடவடிக்கைக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவுக் கொடுத்து வருகிறது என்றும், சீனாவின் இத்தகைய போக்குக்கு உலக சுகாதார அமைப்பும் ஒரு காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

கடந்த வாரம் ‘கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் என்ற தகவல் முதற்கொண்டு பல்வேறு விவரங்களை சீனா பொதுவெளியில் மிகவும் காலம் தாழ்த்தியே வெளியிட்டது. இந்நிலையில் வைரஸின் தீவிரத்தன்மைக்குறித்து மற்ற நாடுகளுக்கு எச்சரிச்சை விடுக்கவேண்டிய உலகச் சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் நோய்ப்பரவல் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது’ என அமெரிக்க அதிபர் டெனால்ட்டு ட்ரம்ப் கடுமையான குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார். மேலும் அமெரிக்கா உலக சுகாதார அமைப்புக்கு கொடுத்துவந்த நிதியுதவி நிறுத்தப்படும் எனவும் எச்சரித்து இருந்தார்.

வெள்ளைமாளிகையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகம் மற்றும் கொரோனா நடவடிக்கைகள் குறித்த தகவல்களை மூடி மறைத்தது போன்ற செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும்படி தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த மதிப்பீட்டு விசாரணை குறித்த அறிக்கை வெளிவரும் வரை உலக சுகாதார அமைப்புக்கு கொடுக்கப்படும் நிதியை கொடுக்க வேண்டாம் எனவும் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். உலக அளிவிலேயே உலகச் சுகாதார அமைப்புக்கு அதிக நிதியை கொடுக்கும் நாடாக அமெரிக்கா விளங்கிவருகிறது. சென்ற ஆண்டின் நிதி ஒதுக்கீடு 400 மில்லியன் டாலராக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, தற்போது ஊடகங்கள் சீனா மீது அமெரிக்கா எதிர்ப்பு காட்டுகிறதா? அல்லது உலகச் சுகாதார அமைப்பு மீது எதிர்ப்பு காட்டுகிறதா என்கிற ரீதியில் விவாதம் நடத்தி வருகின்றன. கடுமையான கொரோனா பாதிப்புக்கு நடுவில் உலக நாடுகள் இத்தகைய மோதல் போக்குகளில் இருந்து தள்ளியிருக்க வேண்டும் என்று ஐ.நா. சபைத் தலைவர் கடந்த மாதத்தில் அறிவுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனாவுக்கு நடுவில் தேர்தல் நடத்தும் தென்கொரியா!!! நடைமுறை சாத்தியங்கள்!!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் தென்கொரியா நாடாளுமன்றத் தேர்தலை நடத்திவருகிறது.

மத்தியஅரசு அறிமுகப்படுத்திய “ஆரோக்கிய செயலி”  ஆப் ஏன் விமர்சிக்கப்படுகிறது???

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசால் கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி “ஆரோக்கிய சேது”

மே 3 வரை எல்லாம் பத்தாது, 2022 வரை சமூக விலகல் வேண்டும்: ஹார்வர்டு பல்கலை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 3ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்,

கொரோனாவிடம் இருந்து தப்பித்த சென்னையின் 2 மண்டலங்கள்: எப்படி சாத்தியமாயிற்று

ந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, டெல்லியை அடுத்து தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கேரளாவிடம் இருந்து பாடம் கற்று கொள்ளுங்கள்: எஸ்.ஆர் பிரபு அறிவுரை

இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டது. அதன்பின் கேரளாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக முதலிடத்தில் இருந்தது